உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மார்கழி மாத சங்கீத உற்சவ விழா: இசை ஆர்வலர்கள் பங்கேற்பு

மார்கழி மாத சங்கீத உற்சவ விழா: இசை ஆர்வலர்கள் பங்கேற்பு

பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள இசைத்தமிழ் சங்கத்தின் சார்பில், மார்கழி மாத சங்கீத உற்சவ விழா நடந்தது.


நிகழ்ச்சியில், இச்சங்கத்தின் செயலாளர் சிவாய ராமலிங்கம் வரவேற்றார். மாணிக்க விநாயகர் ஆலய நிர்வாகி வீராசாமி தலைமை வகித்து, விழாவை துவக்கி வைத்தார். முதல் நாள், சித்ரலேகா ராமச்சந்திரனின் வாய்ப்பாட்டு நிகழ்ச்சியும், தொடர்ந்து அரசு பள்ளியில் படிக்கும் தமிழக கவர்னரிடம் விருது பெற்ற மாணவி நிரஞ்சனாவின் சாக்சா போன் இசை நிகழ்ச்சியும் நடந்தது. இதற்கு வடசித்தூர் ராமச்சந்திரன் மிருதங்கமும், ஊட்டி ராஜேந்திரன் வயலின், கோவை பிரகாஷ் கஞ்சிரா, நாயக்கன்பாளையம் ஜெகநாதன் முகர்சிங் வாசித்தனர். இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் முதலில் சிறுமுகை மதுவந்தியின் வாய்ப்பாடு நிகழ்ச்சியும், தொடர்ந்து பொள்ளாச்சி இசை சகோதரிகளான அமிர்தவர்ஷினி, ஹர்ஷினி ஆகியோரின் வாய்ப்பாட்டு நிகழ்ச்சியும் நடந்தது. இதற்கு பொள்ளாச்சி சங்கீத் வர்மன் வயலின், பொள்ளாச்சி மணிகண்டன் மிருதங்கமும், கோவை பிரகாஷ் கஞ்சிரா, சந்திரகாந்த் கடமும், நாயக்கன்பாளையம் ஜெகநாதன் முகர்சிங்கும் வாசித்தனர். நிறைவு விழாவுக்கு மாணிக்க விநாயக ஆலய நிர்வாகி பழனிசாமி, முன்னாள் கவுன்சிலர் சாமிநாதன் ஆகியோர் தலைமை வகித்து, இசை கலைஞர்களுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவித்தனர். நிகழ்ச்சியில், சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த இசை ஆர்வலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !