உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்புத்தூர் அய்யப்பன் கோயில் மண்டலாபிஷேக விழா

திருப்புத்தூர் அய்யப்பன் கோயில் மண்டலாபிஷேக விழா

திருப்புத்தூர்; திருப்புத்தூர் தர்மசாஸ்தா அய்யப்பன் கோயிலில் மண்டலாபிேஷக நிறைவை முன்னிட்டு சுவாமி திருவீதி உலா நடந்தது. இக்கோயிலி்ல் மண்டலாபிஷேக விழா துவக்கத்தை முன்னிட்டு டிச.16 காலை 7:00 மணிக்கு கணபதி ேஹாமம்,சாஸ்தா ேஹாமம்  நடந்தது. தொடர்ந்து காலையில் மூலவர் சன்னதியில் லட்சார்ச்சனை துவங்கியது. தொடர்ந்து தினசரி காலையில் லட்ச்சார்ச்சனை நடைபெற்று வருகிறது. தினசரி மாலையில் அய்யப்ப பக்தர்களின் பஜனையுடன் மூலவருக்கும், உற்ஸவருக்கும் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது. நேற்று முன்தினம் காலை 10:30 மணிக்கு மூலவருக்கும்,உற்ஸவருக்கும் மண்டலாபிேஷகம் நடந்தது. தொடர்ந்து அலங்காரத்தில் எழுந்தருளிய மூலவருக்கும், உற்ஸவருக்கும் சிறப்பு தீபாராதனைகள் நடந்தன. . இரவில் அலங்கரிக்கப்பட்ட சுவாமி திருவீதி வலம் வந்தனர். அய்யப்ப சரண கோஷத்துடன் பக்தர்கள் பங்கேற்றனர். ஜன.3ல் காலை 11:00 மணிக்கு லட்சார்ச்சனை பூர்ததியாகிறது.  ஜன.11 ல் அய்யப்ப பக்தர்கள் கோயிலில் இருமுடி கட்டி மகரஜோதி தரிசன யாத்திரை துவங்குகின்றனர். ஏற்பாட்டினை பக்தர்கள்,மகரஜோதி யாத்திரை குழு,மணிகண்டன் இளைஞர் நற்பணி மன்றம்,கோயில் நிர்வாகத்தினர் செய்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !