தினமலர் செய்தி எதிரொலி; திருப்பரங்குன்றம் தெப்பக்குளத்தில் தூய்மை பணி
ADDED :7 hours ago
திருப்பரங்குன்றம்; தினமலர் செய்தி எதிரொலியாக திருப்பரங்குன்றம் தெப்பக்குளத்தில் தூய்மை பணி நடக்கிறது. ஜன. 28ல் நடக்கவுள்ள தெப்பத் திருவிழாவிற்காக, ஜி.எஸ்.டி., ரோடு பகுதியிலுள்ள தெப்பக்குளத்தில் சில தினங்களுக்கு முன்பிருந்து தண்ணீர் நிரப்பப்படுகிறது. ஏற்கனவே சிறிதளவு கிடந்த தண்ணீரில் ஏராளமான செடிகள் வளர்ந்துள்ளன. அவற்றை அப்புறப்படுத்தி விட்டு, தூய்மை செய்த பின்பு தண்ணீர் நிரப்பினால் சுகாதாரமாக இருக்கும் என போட்டோவுடன் தினமலர் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. செய்தியின் எதிரொளியாக தெப்பக்குளத்தில் கோயில் சார்பில் தூய்மை பணிகள் நடக்கிறது.