உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புத்தாண்டின் முதல் நாளில் முருகனை தரிசித்து பக்தர்கள் பரவசம்; வடபழநியில் குவிந்தனர்

புத்தாண்டின் முதல் நாளில் முருகனை தரிசித்து பக்தர்கள் பரவசம்; வடபழநியில் குவிந்தனர்

சென்னை; 2026ம் ஆண்டின் முதல் நாளான இன்று வடபழநி முருகன் கோவிலில் அதிகாலை முதல் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். நின்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.


சென்னை, வடபழநி ஆண்டவர் கோவிலில், ஆங்கில புத்தாண்டை ஒட்டி, இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தங்க காசு அலங்காரத்தில் முருகன் அருள்பாலித்தார். கோவிலில் அதிகாலை முதல் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது; ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து வழிபட்டு வருகின்றனர். காலை முதல், இரவு வரை, வெள்ளி நாணய கவச அலங்காரம், தங்க கவச அலங்காரம், சந்தனகாப்பு மற்றும் புஷ்ப அலங்காரம் போன்ற வைபவங்கள் நடக்க உள்ளன. பக்தர்கள் தரிசனம் செய்ய ஏதுவாக, சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சிறப்பு வழி மற்றும் பொது தரிசனம் செய்ய, வடபழநி ஆண்டவர் கோவில் தெருவிலுள்ள, தெற்கு ராஜகோபுரம் வழியாக, பக்தர்கள் செல்லலாம். இன்று ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு நடிகர் சிவகார்த்திகேயன் வடபழநி ஆண்டவரை மனைவியுடன் தரிசனம் செய்தார். கோவிலில் பக்தர்களுக்கு சிறப்பான முறையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக மகிழ்ச்சி தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !