பஞ்சவடி பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில் புத்தாண்டு சிறப்பு தரிசனம்
புதுச்சேரி; புத்தாண்டை முன்னிட்டு புதுச்சேரியை அடுத்த பஞ்சவடி பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில் 36 அடி உயர பஞ்சமுக ஆஞ்சநேயர் பட்டாபிஷேக ராமச்சந்திரன் மூர்த்திகளுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
புதுச்சேரி அடுத்த பஞ்சவடி பஞ்சமுக ஆஞ்சநேய சுவாமி கோவிலில் ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, அதிகாலை 2:45 மணிக்கு நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம், தனுார் மாத பூஜைகளை தொடர்ந்து விடியற்காலை 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டது. மூலவர் பஞ்சமுக ஆஞ்சநேயர் பட்டாபிஷேக ராமச்சந்திரன் மூர்த்திகளுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள், 106 திவ்ய தேசங்களுக்கு சென்று புண்ணிய நதிகளில் புனித நீராடிய ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி சுவாமியின் ஸ்வர்ண பாதுகையை அருகில் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்படடிருந்தது. ஏராளமான பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு இனிப்புடன் கூடிய பிரசாதம் வழங்கப்பட்டது.