மணக்குள விநாயகர் கோவிலில் புத்தாண்டு தரிசனம்; பக்தர்கள் குவிந்தனர்
ADDED :17 hours ago
புதுச்சேரி; ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு மணக்குள விநாயகர் கோவிலில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
புதுச்சேரியில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு மணக்குள விநாயகர் கோவிலில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இன்று 1ம் தேதி காலை 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு மூலவர் மணக்குள விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. காலை 5:00 மணிக்கு பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். அபிஷேக ஆராதனை முடிந்து, மூலவருக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டது. உட்பிரகாரத்தில் உற்சவர் நடராஜர் அலங்காரத்தில் அருள்பாலித்தார். வரும் பக்தர்களுக்கு வழங்க லட்டு பிரசாதங்கள் கோவில் நிர்வாகம் தயார் செய்துள்ளது. மணக்குள விநாயகரை நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.