உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிதம்பரம் நடராஜருக்கு நவரத்தின ஆபரணம்; வெளிநாட்டு பக்தர் காணிக்கை

சிதம்பரம் நடராஜருக்கு நவரத்தின ஆபரணம்; வெளிநாட்டு பக்தர் காணிக்கை

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜருக்கு, வெளிநாட்டு பக்தர், ரூ. 25லட்சம் மதிப்புள்ள நவரத்தின ஆபரணம் வழங்கினார்.

மன்னர்கள் காலத்தில், நவரத்தின கற்கள் பதித்த ‘துறாய்’ தங்க ஆபரணங்கள் பயன்படுத்துவது வழக்கமாக இருந்துள்ளது. அந்த வகையில், தற்போது வெளிநாட்டை சேர்ந்த பக்தர் ஒருவர், நவரத்தின கற்கள் பாதிக்கப்பட்ட ‘துறாய்’ ஆபரணத்தை, காணிக்கையாக அளித்துள்ளார்.

காணிக்கையாக செலுத்தப்பட்ட நகை, மேளதாளங்கள் முழங்க, ஊர்வலமாக எடுத்து சென்று, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, நடராஜருக்கு அணிவிக்கப்பட்டது. பாஸ்கர் தீட்சிதர் அந்த நகையை கோவில் பொது தீட்சிதர்களிடம் ஒப்படைத்தார். அந்த நகை, 25 லட்சம் மதிப்பும், 15 சவரன் தங்க நகையாகும். இதன் மீது நவரத்தின கற்கள் பதித்து, 200 ஆண்டுகளுக்கு முன்பு மன்னர்கள் காலத்தில் பயன்படுத்தப்பட்ட ‘துறாய்’ ஆபரணம் போல் இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !