புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில் சொர்ணாபிஷேகம்
ADDED :1 hours ago
திட்டக்குடி; ஆங்கில புத்தாண்டையொட்டி, திட்டக்குடி அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில் சொர்ணாபிஷேகம் நடந்தது.
இதையொட்டி, இன்று அதிகாலை 5:00 மணியளவில், உலக மக்கள் நலன் பெற வேண்டி சிறப்பு திருமஞ்சனம்; 6:00 மணியளவில் மகா தீபாராதனை நடந்தது. 7:00 மணியளவில் முன் மண்டபத்தில் அலங்கரிக்கப்பட்ட உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் சுவாமிக்கு சொர்ணாபிஷேகம் பூஜை; 8:00 மணியளவில் மகா தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு நாணயம் பிரசாதமாக வழங்கப்பட்டது. பூஜை ஏற்பாடுகளை, பஞ்சவடீ பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் தலைவர் கோதண்டராமன், புத்தேரி செல்வவிநாயகர் மற்றும் வரதராஜ பெருமாள் கோவில் தலைவர் தமிழ்மணி ராதாகிருஷ்ணன், ஆலய ஆலோசகர் ராதாகிருஷ்ணன் செய்திருந்தனர்.