உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குழந்தை வேலப்பர் கோயிலை சுற்றி உள்ள விநாயகர் சிலைகளுக்கு குடமுழுக்கு

குழந்தை வேலப்பர் கோயிலை சுற்றி உள்ள விநாயகர் சிலைகளுக்கு குடமுழுக்கு

ஒட்டன்சத்திரம்; ஒட்டன்சத்திரம் அருள்மிகு குழந்தை வேலப்பர் மலை கோயிலை சுற்றி 108 விநாயகர் சிலைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது .முதல் கட்டமாக 6 விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டு குடமுழுக்கு விழா நடந்தது. முன்னதாக யாக வேள்வி நடந்தது. இதைத் தொடர்ந்து புண்ணிய நதிகளில் இருந்து எடுத்து வரப்பட்ட தீர்த்த கலசங்கள் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு விநாயகர் சிலைகளுக்கு தீர்த்தம் செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !