பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் நடராஜர் - சிவகாமி தாயருக்கு சிறப்பு அபிஷேகம்
ADDED :6 days ago
கோவை : வருடத்திற்கு ஒரு முறை திருவாதிரை நட்சத்திரத்தில் வரும் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் இருக்கும் நடராஜர் - சிவகாமி தாயருக்கு அதிகாலையில் சிறப்பு பூஜை, அபிஷேகம் நடந்தது. இதில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்த நடராஜர் - சிவகாமி தாயார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. கோவை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் சிவன் கோவில்களில் உள்ள நடராஜருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.