மேலூர் சிவன் கோயிலில் மார்கழி திருவாதிரை; ஆருத்ரா தரிசனம்
ADDED :9 days ago
மேலூர்; மேலூர் சிவன் கோயிலில் மார்கழி திருவாதிரை நட்சத்திரத்தை முன்னிட்டு ஆருத்ரா தரிசனம் நடந்தது. நேற்று இரவு முழுவதும் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. இன்று திருவெம்பாவை பாடப்பட்டது.அதனை தொடர்ந்து செயல் அலுவலர் வாணி மகேஸ்வரி ஏற்பாட்டின் பேரில் சிவாச்சாரியார்கள் தட்சிணாமூர்த்தி, ராஜா தலைமையில் கேடய வாகனத்தில் நடராஜர், சிவகாமி அம்பாள் மற்றும் மாணிக்கவாசகர் நகரின் முக்கிய வீதிகள் வழியாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.