பாரியூர் கொண்டத்து காளியம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம்
ADDED :5 days ago
கோபி; கோபி அருகே பிரசித்தி பெற்ற பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவிலில், நடப்பாண்டு குண்டம் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, முக்கிய நிகழ்வான சந்தனக் காப்பு அலங்காரம் நேற்று நடந்தது. மூல வராக வீற்றிருக்கும் அம்மனுக்கு, நேற்று காலை இளநீர், பால், தயிர், கரும்பு பால், திருமஞ்சனம், மஞ்சள் துாள், மாதுளை, சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங் களை கொண்டு பல்வேறு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதையடுத்து, 12 ஆயிரம் பூவன் பழம், நாட்டு சர்க்கரை, 300 கிலோ பேரிச்சம் பழம், 20 கிலோ, திராட்சை மற்றும் கற் கண்டு கொண்டு தயாரிக்கப்பட்ட, மூன்று டன் பஞ்சாமிர்தத்தால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதன் பின் பத்து கிலோ சந்த னத்தை கொண்டு, மூலவருக்கு சிறப்பு அலங்காரம் நடந்தது. நுாற்றுக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.