பொள்ளாச்சி சீரடி சாய்பாபா கோவிலில் பவுர்ணமி சிறப்பு பூஜை
ADDED :2 days ago
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே ஆனைமலை சீரடி சாய்பாபா கோவிலில், பவுர்ணமி சிறப்பு பூஜை நடந்தது. ஆனைமலை தர்மராஜா காலனியில் சீரடி சாய்பாபா கோவில் உள்ளது. இங்கு, பவுர்ணமியையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதுபோன்று, இம்மாத பவுர்ணமியையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, சத்யநாராயண பூஜைகள் நடைபெற்றன. சிறப்பு அலங்காரத்தில் சீரடி சாய்பாபா, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.