உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஹிந்துக்கள் ஒன்றிணைந்தால் நீதி வெல்லும் காமாட்சிபுரம் ஆதீனம் கருத்து!

ஹிந்துக்கள் ஒன்றிணைந்தால் நீதி வெல்லும் காமாட்சிபுரம் ஆதீனம் கருத்து!

பல்லடம்; ஹிந்துக்கள் ஒன்றிணைந்தால் நீதி வெல்லும் என்பதற்கு ஐகோர்ட் தீர்ப்பு ஒரு உதாரணம் என, கோவை காமாட்சிபுரி ஆதினம் பஞ்சலிங்கேஸ்வரர் கருத்து தெரிவித்துள்ளார்.


இது குறித்து அவர் கூறியதாவது: அன்று, அசுரர்களால், தேவர்களுக்கும், மக்களுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டபோது, முருகப்பெருமான் அவதாரம் எடுத்து, உலகைக் காத்தார். ஆனால், இன்று தமிழ்க் கடவுளான முருகப்பெருமானுக்கு ஒவ்வொரு காலகட்டங்களிலும் பல்வேறு சோதனைகள் வந்து கொண்டுள்ளன. அதையெல்லாம் பக்தர்கள் தங்களது போராட்டங்களால் வென்றெடுத்துள்ளனர். அவ்வாறு, அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றத்தில், பல நூறு ஆண்டுகளாக நம் முன்னோர்கள் கார்த்திகை தீபம் ஏற்றி முருகப்பெருமானை வழிபட்டு வந்துள்ளனர். அதற்கும் இடையூறு ஏற்பட்டபோது, தமிழகம் முழுவதும் உள்ள பக்தர்கள் நமது பாரம்பரியம், கலாச்சாரம் காக்க தயாராகினர். ஹிந்துக்கள் அனைவரும் ஒன்றிணைந்தால் நீதி வெல்லும் என்பதற்கு இது ஒரு உதாரணம். தீப ஒளி எவ்வாறு பிரகாசிக்கிறதோ அதுபோல் ஆறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் மலைமீது ஏற்றப்படவுள்ள தீப ஒளியால், ஹிந்துக்களின் மனம் பிரகாசம் அடைந்துள்ளது. கோர்ட் தீர்ப்பு மூலம் ஹிந்துக்களின் கலாச்சாரம், நம்பிக்கை பாதுகாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !