இடையமேலுார் மாயாண்டி சித்தர் கோயிலில் குருபூஜை விழா
ADDED :1 days ago
சிவகங்கை: சிவகங்கை அருகே இடையமேலுார் மாயாண்டி சித்தர் கோயிலில் 19 ம் ஆண்டு குருபூஜை விழா நடைபெற்றது.
ஜன., 8 ம் தேதி காலை கணபதி ேஹாமத்துடன் குருபூஜை விழா தொடங்கியது. அதனை தொடர்ந்து கோமாதா பூஜை, அபிேஷகம், தீபாராதனை சொற்பொழிவு, பொங்கல் விழா, கலைநிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை ஆன்மிக சொற் பொழிவு, மகேஸ்வர பூஜை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். இரவு சுவாமி புறப்பாடு நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாட்டை மாயாண்டி சித்தர் அறக்கட்டளை மற்றும் அக்னி மகரிஷி சத்குரு மாயாண்டி சுவாமி அன்னதான குழு, மாயாண்டி சித்தர் அறக்கட்டளை உறுப்பினர்கள் செய்தனர்.