உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி அழகு நாச்சியம்மன் கோயிலில் திசா ஹோமம்

பழநி அழகு நாச்சியம்மன் கோயிலில் திசா ஹோமம்

பழநி; பழநி, அழகுநாச்சி அம்மன் கோவிலில் தைப்பூச பாதயாத்திரை பக்தர்கள் நலன் வேண்டி சிறப்பு திசா யாக பூஜை நடைபெற்றது.


பழநி கோயிலுக்கு தைப்பூசத்தை முன்னிட்டு பாதயாத்திரை பக்தர்கள் வருகை அதிகரித்து வருகிறது. பத்தர்களின் பாதுகாப்பு மற்றும் நலன் வேண்டி கிழக்கு கிரிவீதியில் உள்ள அழகு நாச்சி அம்மன் கோயிலில் நேற்று கும்ப கலசங்கள் வைத்து, திசாஹோமம் நடைபெற்றது. யாகத்தில் வைக்கப்பட்ட கலசநீரில் சுவாமிக்கு அபிஷேகம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது. நிகழ்ச்சியில் கந்த விலாஸ் விபூதி ஸ்டோர் உரிமையாளர் செல்வகுமார், நவீன்விஷ்ணு, நரேஷ் குமரன், பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !