சிதம்பரம் நடராஜர் கோவிலில் 900 மாணவியர் நாட்டியாஞ்சலி
சிதம்பரம்: கடலுார் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில், உலக சாதனை முயற்சியாக, 900க்கும் மேற்பட்ட நாட்டிய மாணவியர் பங்கேற்று நடனமாடினர்.
உலக பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில், ‘ஆஸ்பயர்’ உலக சாதனை புத்தகத்தில் இடம்பெறும் முயற்சியாக, ஒரே நேரத்தில், 1,000 நடன மாணவியரின் நடன நிகழ்ச் சி நடந்தது. இதில், கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தில், கடலுார், சென்னை, மதுரை, மயிலாடுதுறை, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், 900க்கும் மேற்பட்ட நடன மாணவியர் பங்கேற்று நாட்டியாஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. நாட்டியமாடிய மாணவியருக்கு, ஆஸ்பயர் உலக சாதனை புத்தகம் சார்பில், சான்றிதழ் வழங்கப் பட்டது. நாட்டிய மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் கூறுகையில், ‘நடராஜர் கோவிலில் நாட்டியம் ஆடுவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. உலகத்தின் மையமான இங்கு நடன விழா நடந்தது, மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது’ என்றனர். ஒரே நேரத்தில், 900க்கும் மேற்பட்ட நடன மாணவியர், கோவிலில் நடனமாடியதால், நேற்று காலை நடராஜர் கோவில் கோலாகலமாக காணப்பட்டது.