உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அஷ்டமி பூப்பிரதட்சனம் : ராமேஸ்வரத்தில் சுவாமி, அம்மன் வீதிஉலா

அஷ்டமி பூப்பிரதட்சனம் : ராமேஸ்வரத்தில் சுவாமி, அம்மன் வீதிஉலா

ராமேஸ்வரம்; அஷ்டமி பூப்பிரதட்சனம் யொட்டி ராமேஸ்வரத்தில் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் தங்க ரிஷப வாகனத்தில் வீதி உலா சென்று பக்தர்கள், ஜீவராசிகளுக்கு படியளந்து கொடுத்தனர். நேற்று அஷ்டமி பூப்பிரதட்சனம் யொட்டி காலை 7:20 மணிக்கு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் இருந்து சுவாமி பர்வத வர்த்தினி அம்மன் தங்க ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா சென்றனர். பின் கோயில் ரதவீதி, நகராட்சி அலுவலகம், திட்டகுடி வழியாக வீதி உலா சென்று பக்தர்கள், ஜீவராசிகளுக்கு படியளத்தில் கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது வீதியெங்கும் கூடியிருந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பின் மதியம் 12:30 மணிக்கு சுவாமி, அம்மன் கோயிலுக்கு சென்றனர். இதனால் காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரை கோயில் நடை சாத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !