கன்னிகா பரமேஸ்வரி பவித்திர பட்டு மாலையில் அருள் பாலிப்பு
ADDED :33 minutes ago
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் கூடாரவல்லியை முன்னிட்டு அம்மன் பவித்திர பட்டு மாலை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
திருக்கோவிலூர், கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில், கூடாரவல்லியை முன்னிட்டு, நேற்று காலை 7:00 மணிக்கு மூலவர் அம்மனுக்கு விசேஷ அபிஷேகம், பவித்திர பட்டு மாலையில் அம்மன் அலங்கரிக்கப்பட்டு, சோடசோபவுபச்சார தீபாராதனை நடந்தது. ஆரிய வைசிய சமூகத்தின் சார்பில் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி வழிபாடு செய்தனர்.