உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இன்று திரைலோக்ய கவுரி விரதம்; அம்பாளை வழிபட நல்லதே நடக்கும்!

இன்று திரைலோக்ய கவுரி விரதம்; அம்பாளை வழிபட நல்லதே நடக்கும்!

பார்வதி தேவியின் வடிவமான கவுரியை வழிபட சிறந்த தினம் இது. திரைலோக்ய கவுரி விரதம் மார்கழி மாதத்தில் அனுஷ்டிக்கப்படும் ஒரு முக்கியமான விரதமாகும். இது 16 செல்வங்களையும் அருளும் 16 வடிவங்களாகக் கருதப்படும் கௌரி தேவியை வழிபடும் விரதம். இது ஆண்களும் பெண்களும் சமம் என்பதையும், சக்தி இன்றி சிவன் இல்லை என்பதையும் உணர்த்துகிறது. இந்த விரதத்தை கடைப்பிடிப்பதன் மூலம் சகல சௌபாக்கியங்களும், சிறந்த புத்திரப்பேறும், வறுமை நீங்கி நினைத்த காரியங்கள் கைகூடும்.  வீட்டில் கலசம் அமைத்து கவுரி தேவியை ஆவாகனம் செய்து வழிபடலாம். லலிதா சஹஸ்ரநாமம் சொல்லி அம்பாளை வழிபடுதல் சிறப்பு. கவுரியை மனமுருகி வழிபட விரைவில் கல்யாணம் கைகூடும் என்பது நம்பிக்கை. இன்று அம்பாளை வழிபட்டு செல்வ கடாட்சம் பெறுவோம்..!



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !