இலத்தூர் கோயிலில் பைரவருக்கு அஷ்டமி பூஜை!
ADDED :4988 days ago
புளியரை: இலத்தூர் கோயிலில் பைரவருக்கு அஷ்டமி பூஜை நடந்தது.இலத்தூர் மதுநாதர் கோயிலில் அஷ்டமி திதியை முன்னிட்டு கால பைரவருக்கு சிறப்பு பூஜை நடந்தது. மதுநாதர் கோயிலில் கால பைரவர் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.நேற்று அஷ்டமி திதியை முன்னிட்டு மாலையில் பைரவருக்கு அபிஷேகங்கள், அலங்காரங்கள், கூட்டு பிரார்த்தனை தொடர்ந்து தீபாராதனைகள் நடந்தன. கால பைரவர் பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.கணக்கப்பிள்ளைவலசை, வேல்மலை முருகன்கோயிலில் சொர்ண பைரவருக்கு அஷ்டமிதிதி பூஜை வழிபாடு விமரிசையாக நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.