உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் தாயார் உற்சவம் துவக்கம்

கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் தாயார் உற்சவம் துவக்கம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் தாயார் உற்சவம் நேற்று துவங்கியது. கள்ளக்குறிச்சி புண்டரீக வள்ளி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் பகல் பத்து, ராபத்து உற்சவங்களுக்கு பின் புண்டரீக வள்ளி தாயாருக்கு 10 நாள் உற்சவம் நேற்று துவங்கியது.தயார் உற்சவ மூர்த்திக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்து வைக்கப்பட்டு பூஜைகள் நடந்தது. நேற்று துவங்கிய தாயார் உற்சவம் 13ம் தேதி வரை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !