உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெருமாள் கோயில்களில் ஏகாதசி சிறப்பு பூஜை

பெருமாள் கோயில்களில் ஏகாதசி சிறப்பு பூஜை

திருவாடானை: திருவாடானை அருகே குளத்துார் குலசேகர பெருமாள், தொண்டி உந்திபூத்த பெருமாள், பாண்டுகுடி லட்சுமி நாராயண பெருமாள், ஆலம்பாடி கரியமாணிக்க பெருமாள் கோயில்களில் நேற்று ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. கோயில்களில் பக்தர்கள் திரளாக வந்து வழிபட்டனர்.


மூலவருக்கு பால், தயிர், நெய், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.


தொடர்ந்து அலங்கார ஆராதனைகள், தீபாராதனை நடைபெற்றது. ஏகாதசியை முன்னிட்டு விரதம் இருந்த பக்தர்கள் பூஜைகளில் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !