பரமக்குடியில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்ட ஓவியங்கள்: வியக்க வைக்கிறது
பரமக்குடி; ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பெருமாள் கோயிலில் நூற்றாண்டுகளுக்கு முன்பு வரையப்பட்ட ஓவியங்கள், பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்ட நிலையில் பார்ப்போரை வியக்க வைக்கும் வகையில் உள்ளது. பரமக்குடி சவுராஷ்டிர பிராமண மகாஜனங்களுக்கு பாத்தியமான சுந்தரராஜ பெருமாள் கோயிலில் கருடன், அனுமன், ராமர் பட்டாபிஷேகம், மகாபாரத போர்க்கள கிருஷ்ண உபதேச காட்சி, பாற்கடலில் பள்ளி கொண்ட பெருமாள் என மதுரை எல்பிஏ. பாகவதர் என்பவரால் வரையப்பட்ட பழங்கால ஓவியங்கள் உள்ளன. இதில் ஹைலைட்டாக இக்கோயிலில் அருள்பாலிக்கும் சுந்தரராஜ பெருமாளுக்கு உரித்தான கள்ளழகர் திருக்கோலம் அப்போதே 3டி வடிவில் சுவற்றில் வரைந்து உள்ளனர். இவை அனைத்தையும் பரமக்குடி கருடா ஆர்ட் என்ற பெயரில் இயங்கி வரும் ஓவியர்கள் சண்முகநாதன் மற்றும் ரவி என்பவர்களது கை வண்ணத்தில் புதுப்பொலிவு பெற்றுள்ளது. மேலும் தற்போதைய காலத்திற்கு ஏற்ப சுவாமி சிற்பங்களில் நகை வேலை பார்ப்பது போன்று வண்ண கற்களை பதித்து மேம்படுத்தி உள்ளனர். இதனால் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் அனைத்து ஓவியங்களையும் கண்டு மகிழ்வதுடன் அனைத்து புராண காட்சிகளும் கண் முன்னிறுத்தும் வகையில் உள்ளதாக தெரிவிக்கின்றனர். இதன்படி கோயில்களில் ராஜகோபுரம் உட்பட அனைத்து வகையான வர்ண வேலைகளையும் செய்து வருவதாக ஓவியர்கள் தெரிவித்தனர். ஓவியர்களை பாராட்ட... 96007 53157,