ஜன. 14ல் சபரிமலையில் மகரஜோதி!
ADDED :4737 days ago
சபரிமலை: சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஜன. 14 ஆம் தேதி மாலை பொன்னம்பல மேட்டில் மகரஜோதி ஏற்றப்படுகிறது. இதற்காக க சபரிமலை ஐயப்பன் கோவில் நடை டிச. 30-ம் தேதி மாலை திறக்கப்பட்டது. டிச. 31 முதல் பூஜை வழிபாடு, நெய் அபிஷேகம் நடைபெற்று வருகின்றன. இந்த விழாவில் பங்கேற்க உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் இருமுடி கட்டி சபரிமலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜன. 14 ஆம் தேதி மாலை பொன்னம்பலமேட்டில், மூன்று முறை மகரஜோதி தரிசனம் தெரியும்.