உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காணும் பொங்கல் தரிசனம் திருநள்ளாறில் திரண்ட பக்தர்கள்

காணும் பொங்கல் தரிசனம் திருநள்ளாறில் திரண்ட பக்தர்கள்

காரைக்கால்: காணும் பொங்கலையொட்டி, திருநள்ளாறு சனி பகவானை, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்தனர். காரைக்கால் அருகே, திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோவிலில், தனி சன்னிதியில் சனி பகவான் அருள் பாலிக்கிறார்.


இக்கோவிலில், மார்ச்.,6ம் தேதி ‘சனிப்பெயர்ச்சி விழா நடக்கவுள்ளது. அன்று காலை, 8:24 மணிக்கு சனி பகவான், கும்ப ராசியிலிருந்து, மீன ராசிக்கு பிரவேசிக்கிறார். இந்நிலையில், நேற்று, காணும் பொங்கல் மற்றும் சனி சிவாராத்திரியையொட்டி, அதிகாலை 4:00 மணியில் இருந்தே ஏராளமான பக்தர்கள், திருநள்ளாறு கோவிலுக்கு வருகை புரிந்தனர். சிறப்பு அபிஷேகத்தையடுத்து, வெள்ளிக்கவச அலங்காரத்தில் சனி பகவான் அருள்பலித்தார்.


பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கில் திரண்ட பக்தர்கள், சுமார் 2 மணி நேரம் காத்திருந்து, சுவாமியை தரிசித்தனர். ஏராளமான போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்தனர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !