பழநி முருகன் கோயிலுக்கு வரும் பாதயாத்திரை பக்தர்கள் அதிகரிப்பு
பழநி: பழநி முருகன் கோயிலுக்கு வரும் பாதயாத்திரை பக்தர்களின் வருகை நேற்று அதிகரித்திருந்தது.
இக்கோயிலுக்கு தைப்பூச பாதயாத்திரையாக வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று பக்தர்கள் ரோடுகளில் ஆட்டம் பாட்டத்துடன் நடந்து வந்தனர். பழநி பழைய தாராபுரம் ரோடு வழியாக பக்தர்கள் அதிகளவில் வந்து சேர்ந்தனர். பக்தர்களுடன் ஏராளமான வாகனங்கள் நகருக்குள் வந்து சென்ற வண்ணம் இருந்தது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பாதயாத்திரையாக நடந்து வரும் பக்தர்கள், நகரின் எல்லையில் ஓம் என, வரைந்தனர். பின் அதன் மீது கற்பூரம் ஏற்றி வழிபாடு நடத்துகின்றனர். பின் நகருக்குள் ரோடு வழியாக வந்தனர். திண்டுக்கல், கோவை செல்லும் ரோடுகளில் பக்தர்கள் வருகை அதிகரித்தது. நகரில் நிர்ணயிக்கப்பட்ட வேகத்தை விட கூடுதல் வேகமாக இயக்கப்படும் வாகனங்கள் போலீசார் கண்காணிக்க தவறியதால், முருக பக்தர்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.