சித்தலுார் பெரியநாயகி அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
ADDED :2 days ago
தியாகதுருகம்: சித்தலுார் பெரியநாயகி அம்மன் கோவிலில் தை அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடந்தது.
தியாகதுருகம் அடுத்த சித்தலுாரில் உள்ள பிரசித்திபெற்ற பெரியநாயகி அம்மன் கோவிலில், தை அமாவாசையை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. அதனை தொடர்ந்து, சந்தன காப்பு அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளினார். தமிழகம் முழுவதிலும் இருந்து வந்த பக்தர்கள் கோவில் வளாகத்தில் பொங்கலிட்டு, மாவிளக்கு ஏற்றி வழிபாடு செய்தனர். மாலை 6 மணிக்கு நடந்த யாகத்தில் மிளகாய் வற்றல் சேர்த்து சிறப்பு பூஜை, இரவு 9:00 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. வசந்த மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மனை ஊஞ்சலில் வைத்து, பக்தி பாடல்கள் பாடி தாலாட்டினர். பக்தர்கள் கும்மியடித்து அம்மனை போற்றி வழிபட்டனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.