புதுச்சேரி வாசவி கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் புஷ்ப யாகம்
ADDED :14 hours ago
புதுச்சேரி: வாசவி கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் புஷ்ப யாகம் நடந்தது. புதுச்சேரி ஈஸ்வரன் கோவிலில் வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் சன்னதி உள்ளது. இங்கு நேற்று இரவு உலக நன்மை வேண்டி புஷ்ப யாகம் நடந்தது. முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபி ேஷக ஆராதனை நடந்தது. யாகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.