பழநியில் இருந்து அறுபடை வீடு நடைப்பயணத்தை துவங்கிய பக்தர்கள்
ADDED :2 days ago
பழநி; பழநியில் இருந்து அறுபடை வீடுகளுக்கு பக்தர்கள் நடைபயணத்தை துவங்கினர். பழநி, சின்னக்கலையம்புத்துரை சேர்ந்த சுப்பிரமணி, வேடசந்தூரை சேர்ந்த சுப்பையா, திருவள்ளூர் மாவட்டம், அம்மையார் குப்பத்தைச் சேர்ந்த ஜோதிசன், ஆகியோர் தைப்பூசத்தை முன்னிட்டு உலகநாயகன் வேண்டி ஆறுபடை வீடு தரிசனம் செய்ய நடை பயணமாக ஆண்டுதோறும் சென்று வருகின்றனர். இந்த ஆண்டு பழநி திருஆவினன்குடியில் நேற்று நடைப்பயணத்தை துவங்கினர். நாமக்கல், சேலம் வழியாக திருத்தணி, சென்று அதன் பின் சுவாமிமலை, திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், பழமுதிர்ச்சோலை, வழியாக மீண்டும் பழநி வந்து அடைகின்றனர்.