உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோனியம்மன் கோயில் தேர்த்திருவிழா முகூர்த்த கால் நட்ட சிவாச்சாரியர்கள்

கோனியம்மன் கோயில் தேர்த்திருவிழா முகூர்த்த கால் நட்ட சிவாச்சாரியர்கள்

கோவை: கோனியம்மன் கோயில் தேர்த்திருவிழாவையொட்டி, ராஜவீதி தேர்நிலைத்திடலில் முகூர்த்தகால் நடும் வைபவம் நேற்று நடந்தது.


பெரியகடை வீதியிலுள்ள கோனியம்மன் கோயிலிலிருந்து மங்கல வாத்தியங்கள் முழங்க, முகூர்த்தகால் ஊர்வலமாக தேர்நிலைத்திடலுக்கு எடுத்து செல்லப்பட்டது.திடலில் சிவாச்சாரியர்கள் வேதமந்திரங்கள் முழங்க முகூர்த்தகால் நடப்பட்டது. திரளான பக்தர்கள் மஞ்சள் குங்குமம் இட்டு மலர்களை சமர்ப்பித்து வழிபட்டனர். தேர்த்திருவிழா மார்ச் 4ல் நடக்கிறது. முன்னதாக பிப்.,17ல் பூச்சாட்டு நடக்கிறது. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !