திம்மராஜம்பேட்டை கோவிலில் கும்பாபிஷேகத்திற்கு பந்தகால் நடவு
காஞ்சிபுரம்: திம்மராஜம்பேட்டை ராமலிங்கேஸ்வரர் கோவிலில், கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நேற்று பந்தகால் நடும் நிகழ்ச்சி நடந்தது.
காஞ்சிபுரம் அடுத்த திம்மராஜம்பேட்டை கிராமத்தில், ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில், பர்வதவர்த்தினி சமேத ராமலிங்கேஸ்வர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு, புத்தகரம், கள்ளிப்பட்டு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில், விளை நிலங்கள் உள்ளன.
இந்த கோவில் சீரமைக்கும் பணிக்கு, 18.70 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்த பணிகள் நடந்து வருகின்றன. நேற்று முன்தினம் கோவில் மதில் சுவருக்கு வெள்ளையடிக்கும் பணிகள் நடந்தன.
நேற்று, காலை 9:00 மணி அளவில் பந்தகாலுக்கு பெண்கள் சிறப்பு அபிஷேகம் செய்தனர். பின், மஞ்சள், குங்குமம் இட்டு பந்தகால் நடும் நிகழ்ச்சி நடந்தது.
பிப்.,4ம் தேதி காலை கணபதி பூஜையுடன் கும்பாபிஷேக யாக சாலை பூஜைகள் துவங்க உள்ளன. இதையடுத்து, பிப்.,8ல் கும்பாபிஷேக விழா நடக்க உள்ளது.
85611திம்மராஜம்பேட்டை கோவிலில் கும்பாபிஷேகத்திற்கு பந்தகால் நடவு