உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 3 குருத்துகளுடன் முளைத்த அபூர்வ தென்னங்கன்றுக்கு பூஜை

3 குருத்துகளுடன் முளைத்த அபூர்வ தென்னங்கன்றுக்கு பூஜை

வடமதுரை; சிங்காரக்கோட்டை எஸ். பாறைப்பட்டி விவசாயி சித்திரவேல் 55, தனது தோட்டத்தில் 3 மாதங்களுக்கு முன்பு தென்னங்கன்றுகளை உருவாக்க 500 தேங்காய்களை மண்ணில் நடவு செய்து நீர் பாய்ச்சி பராமரித்தார். கன்றுகள் துளிர்விட்டு வளர்ந்த நிலையில் நேற்று கன்றுகளை தோண்டி எடுத்தபோது, ஒரு தேங்காயில் 3 குருத்துகள் முளைத்திருந்தது. பொதுவாக ஒரு தேங்காயில் ஒரு குருத்து மட்டுமே உருவாகும் நிலையில், 3 குருத்துகள் இருப்பதை அறிந்த ஊர் மக்கள் அபூர்வ தென்னங்கன்றை ஆர்வமுடன் பார்த்துச் சென்றனர். மேலும் சித்திரவேல் குடும்பத்தினர் பூஜை செய்து வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !