மேட்டுப்பாளையத்தில் ஹிந்து குடும்ப சங்கமம் விழா
ADDED :1 days ago
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டியில் ஹிந்து குடும்ப சங்கமம் விழா நடந்தது. முன்னோர்கள் ஏற்படுத்தி கொடுத்த பாரம்பரியமான பண்பாடு, கலாச்சாரம், வாழ்க்கை முறைகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல, இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. நிகழ்ச்சியின் துவக்க நிகழ்வாக வேல் பூஜை செய்யப்பட்டது. இதில் அபிஷேகம், அலங்காரம், வேல் வழிபாடு நடத்தப்பட்டது. விழாவில், ஹிந்துவின் பெருமை குறித்து, ஜோதிட வித்யா., ரவிந்திரகாளிதாஸ் பேசினார். அகத்தியர் ஞானபீடம் பீடாதிபதி சரோஜினி மாதவி கலந்து கொண்டு ஆசியுரை வழங்கினார். நிகழ்ச்சியின் ஒருபகுதியாக குழந்தைகளின் கலை நிகழ்ச்சி நடந்தது. இதில் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பொதுமக்கள் கலந்துக் கொண்டனர்.