சக்தி விநாயகர், ஸ்ரீ சக்தி கருமாரியம்மன் கோவிலில் ஹோம பூஜை
ADDED :2 hours ago
கோவை; மேட்டுப்பாளையம் ரோடு வெள்ள கிணறு பிரிவு சுப்பிரமணியம் பாளையம் அரசு ஐ.டி.ஐ.பின்புறம் உள்ள எம் கே ஜி லே-அவுட் பகுதியில் உள்ள ஸ்ரீ சக்தி விநாயகர் - ஸ்ரீ சக்தி கருமாரியம்மன் கோவில் 8-ம் ஆண்டு விழா ஊர் பொதுமக்களால் இன்று கொண்டாடப்பட்டது. இதில் முதல் நிகழ்வாக காலை 6:30 மணியளவில் கணபதி ஹோமத்துடன் நிகழ்ச்சி துவங்கியது. தொடர்ந்து காலை 9 மணி அளவில் விநாயகர் மற்றும் அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது. அடுத்ததாக மகா தீபாரதனை நடைபெற்றது. நிறைவாக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு சித்தி விநாயகர் மற்றும் ஸ்ரீ சக்தி மாரியம்மன் வழிபட்டனர்.