வாலாந்தரவையில் சேதமடைந்த அம்மன் கோயில் ஊருணி படிக்கட்டு
ADDED :23 hours ago
ரெகுநாதபுரம்: ரெகுநாதபுரம் அருகே வாலாந்தரவை ஊராட்சியில் உள்ள அம்மன் கோயில் ஊருணியில் கடந்த ஆண்டு கட்டப்பட்ட படிக்கட்டுகள் விரைவில் சேதமடைந்தன.
அம்மன் கோயில் ஊரணி பகுதியில் 1000 பேருக்கும் அதிகமானோர் வசிக்கின்றனர். ரூ. 5 லட்சத்தில் கடந்த ஆண்டு ஊருணி கரையில் கட்டப்பட்ட படித்துறை மூன்று மாதங்களுக்கு முன்பு சேதமடைந்து இடிந்து விழுந்தது. தரமற்ற கட்டுமானப் பணிகளால் அரசு நிதி வீணடிக்கப்பட்டுள்ளது. எனவே ஓராண்டிற்கு முன்பு கட்டப்பட்ட படித்துறையை மீண்டும் சீரமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். தரமற்ற கட்டுமான பணிகளால் இது போன்று விரைவிலேயே படித்துறைகள் சேதமடைகின்றன. எனவே உரிய வழிகாட்டுதலை மண்டபம் யூனியன் அலுவலர்கள் வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.