உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சத்தரை கூவம் ஆற்றில் 3 கற்சிலை கண்டெடுப்பு

சத்தரை கூவம் ஆற்றில் 3 கற்சிலை கண்டெடுப்பு

சத்தரை: கூவம் ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட மூன்று கற்சிலைகளை, வருவாய் துறை அதிகாரிகளிடம் மக்கள் ஒப்படைத்தனர்.


திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்துார் ஒன்றியம், சத்தரை பகுதியில் உள்ள கூவம் ஆற்றில் கற்சிலைகள் கிடப்பதாக, காவாங்கொளத்துார் வி.ஏ.ஓ., தேவராஜ் என்பவருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து, தேவராஜ் அளித்த தகவலின்படி, திருவள்ளூர் தாசில்தார் பாலாஜி உத்தரவின்படி, வருவாய் துறையினர் மற்றும் மப்பேடு போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சென்றனர். பின், மூன்று சிலைகளையும் மீட்ட வருவாய் துறையினர், திருவள்ளூர் தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். கடந்த சில நாட்களுக்கு முன், சத்தரை அடுத்துள்ள பிஞ்சிவாக்கம் பகுதியில் 50 சிலைகள் கண்டெடுக்கப்பட்டது. கூவம் ஆற்றில் தண்ணீர் குறைந்து ஒரு மாதமாகிய நிலையில், தற்போது ஆங்காங்கே சிலைகள் கண்டெடுக்கப்படுவதால், யாரேனும் எடுத்து வந்து இங்கு போட்டனரா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும், இந்த கற்சிலைகள் குறித்து தொல்லியல் துறைக்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது என, வருவாய் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !