உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சனீஸ்வர பகவான் கோவில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் பங்கேற்பு

சனீஸ்வர பகவான் கோவில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் பங்கேற்பு

பந்தலூர்: பந்தலூர் அருகே மேங்கோரேஞ்ச் ஸ்ரீ சனீஸ்வர பகவான் கோவில் கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


பந்தலூர் அருகே மேங்கோரேஞ்ச் கரோலைன் எஸ்டேட் பகுதியில் அருள்மிகு ஸ்ரீ சனீஸ்வர பகவான், ஸ்ரீ செல்வ கணபதி திருக்கோவில் அமைந்துள்ளது. கும்பாபிஷேக விழா கடந்த 7-ம் தேதி காலை அனுக்ஞை விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், நவகிரகஹோமம் மற்றும் தீபாராதனையுடன் துவங்கியது. தொடர்ந்து எஸ்டேட் பொது மேலாளர் ஆபிரகாம் மேத்யூ கொடியேற்றினார். தொடர்ந்து பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டதுடன், ஸ்ரீ முனீஸ்வரன் கோவில் வளாகத்தில் இருந்து முளைப்பாரி ஊர்வலம் மேளதாளத்துடன் நடந்தது. தொடர்ந்து, ஸ்ரீ சனீஸ்வர பகவான் மற்றும் ஸ்ரீ செல்வ கணபதிக்கு மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. கும்பாபிஷேக பூஜைகளை சிகாமணி சர்வசாதகம் ஸ்ரீ நாராயண ஐயங்கார், மற்றும் வசந்த் சிவாச்சாரியார் தலைமையிலான குழுவினர் செய்தனர். அன்னதானம் மற்றும் இசைக்கச்சேரி நடந்தது. கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா மற்றும் நிர்வாகிகள் தலைமையிலான கிராம மக்கள் மற்றும் கமிட்டி நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !