உத்தரகோசமங்கையில் மகா சிவராத்திரி உற்ஸவம்; நான்கு கால பூஜையுடன் நடக்கிறது
உத்தரகோசமங்கை; உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயில் பழமையும் புரதான சிறப்பையும் பெற்ற சிவாலயம் ஆகும். மாணிக்கவாசகர்களால் பாடல் பெற்ற இக்கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் சுவாமி தரிசனம் செய்வதற்காக பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் சிவராத்திரி உற்ஸவம் பிப்., 15 ஞாயிற்றுக்கிழமை வருகிறது. பிப்., 15 மாலை துவங்கி இரவு முழுவதும் சிவ வழிபாடு மற்றும் நான்கு ஜாம பூஜைகள் நடக்கிறது. மூலவர் மங்களநாதருக்கு இரவு 9:00 மணிக்கு முதல் கால பூஜையும், இரண்டாம் காலம் 11:00 மணிக்கும், மூன்றாம் கால பூஜையாக மங்களநாதர் சன்னதிக்கு பின்புறம் உள்ள லிங்கோத்பவருக்கு வருடத்திற்கு ஒருமுறை அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடக்கிறது. பின்னர் அதிகாலை 3:00 மணியுடன் நான்காம் கால பூஜை துவங்குகிறது. இந்நிலையில் பூஜைகள் கலந்து கொள்ளக்கூடிய பக்தர்களின் வசதிக்காக பொது தரிசனம் நடைமுறையில் வரிசையாக செல்வதற்கு ஏற்பவும், குடிநீர் வசதி மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைமுறை செய்யப்பட்டுள்ளது. ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தான நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.