கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நடத்துவதன் நோக்கம் என்ன?
ADDED :4689 days ago
கர்ப்பிணிகளுக்கு ஏழு அல்லது ஒன்பதாம் மாதத்தில் வளைகாப்பு நடத்துவர். காப்பு என்பது ரட்சை. தாயும், சேயும் பாதுகாப்பாக நலமோடு இருக்க வேண்டும் என்பதற்காகவே குலதெய்வத்தை வேண்டி இச்சடங்கை நடத்துகிறார்கள். கைநிறைய அணியும் கண்ணாடி வளையல்களால் எழும்பும் ஜல்ஜல் ஓசை கேட்டு குழந்தை விழிப்புணர்வைப் பெறுவதோடு, தாயோடு நெருங்கிய தொடர்பையும் பெறுகிறது.