உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீசத்ய சாய் மண்டலில் சிவராத்திரி விழா

ஸ்ரீசத்ய சாய் மண்டலில் சிவராத்திரி விழா

திருப்பூர்: ஸ்ரீ சத்ய சாய் நல்லுார் பஜன் மண்டலியில் சிவராத்திரி விழா நேற்று நடைபெற்றது. நல்லுாரில் உள்ள ஸ்ரீசத்ய சாய் பஜன் மண்டலியில் சிவராத்திரியை முன்னிட்டு நேற்று மாலை துவங்கி விடியும் வரை சிறப்பு பஜன் நடைபெற்றது. ஸ்ரீசத்ய சாய் பாபாவின் அலங்கரிக்கப்பட்ட உருவப்படத்துக்கு முன்னர் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து சிவராத்திரி வழிபாடு நடந்தது. பஜன் மண்டலி நிர்வாகிகள் மற்றும் சாய் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !