உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி மாரியம்மன் கோயில் மாசி திருவிழா கொடியேற்றம்; தீச்சட்டி எடுத்து பத்தர்கள் நேர்த்திக்கடன்

பழநி மாரியம்மன் கோயில் மாசி திருவிழா கொடியேற்றம்; தீச்சட்டி எடுத்து பத்தர்கள் நேர்த்திக்கடன்

பழநி; பழநி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா திருவிழாவில் நாளை கொடியேற்றம், கம்பத்தில் தீச்சட்டி வைத்தல் நிகழ்வு நடந்தது .


பழநி கிழக்கு ரத வீதியில் மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. பழநி முருகன் கோயில் நிர்வாகத்திற்கு உட்பட்ட இக்கோயிலில் ஆண்டுதோறும் மாசி திருவிழா விமர்சையாக கொண்டாடப்படுகிறது. 21 நாட்கள் நடைபெறும் திருவிழா, பிப். 6, இரவு முகூர்த்தக்கால் நடுதல் உடன் திருவிழா துவங்கியது. பிப்.,10,ல் திருக்கம்பதிற்கு அரிவாள் எடுத்துக் கொடுத்தல், அலங்கரித்தல் நடைபெறும். அலங்கரிக்கப்பட்ட கம்பம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு மாரியம்மன் கோயில் முன் கம்பம் சாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.அன்று இரவு குமாரசத்திரம் அழகுநாச்சி அம்மன் கோயில் அடிவாரம் அழகுநாச்சி அம்மன் கோயில் சாற்றுதல் நடந்தது. பக்தர்கள் பால் மற்றும் மஞ்சள் நீரில் கம்பத்திற்கு அபிஷேகம் செய்து வழிபாடு நேர்த்திக்கடன் செய்து வருகின்றனர்.


கொடியேற்றம்: நேற்று (பிப்.,17ல்) யாக பூஜைகள், கலசத்திற்கு நடைபெற்றது. சூரியன், சந்திரன், சிம்ம வாகனத்தில் அம்மன், லிங்க வடிவம் வரையப்பட்ட மஞ்சள் நிற கொடிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று தீபாராதனை நடந்தது. கொடிக்கம்பத்தின் முன் அம்மன் எழுந்திருந்தினார். கொடி கம்பத்தில் கொடியேற்றம் இரவு 7:30 மணிக்கு நடந்தது. தீச்சட்டி, கோயிலை வலம் வந்து கோயில் முன் உள்ள திருக்கம்பத்தில் வைக்கப்பட்டது. நேற்று முதல் பத்தர்கள் தீச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவர். தங்கமயில் வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடந்தது. 


திருக்கல்யாணம்: பிப்.18ல் அடிவாரம் மற்றும் குமாரசமுத்திரம் அழகு நாச்சியம்மன் கோயில்களில் காலை 9:00 மணிக்கு மேல் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறும். பிப்.24,ல் மாரியம்மனுக்கு திருக்கல்யாணம், பிப்.25ல் தேரோட்டமும் நடைபெற உள்ளது. திருவிழா நாட்களில் வெள்ளியானை, தங்க குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் மாரியம்மன் ரதவீதி உலா நடைபெறும். பிப்.26,ல் கொடி இறக்குதல் உடன் திருவிழா நிறைவடையும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !