ஸ்ரீபட்டாபிராமர் பஜனை கோவிலில் ஆன்மிக சொற்பொழிவு
ADDED :236 days ago
விருத்தாசலம்: விருத்தாசலம் பூதாமூர் ஸ்ரீபட்டாபிராமர் பஜனை கோவிலில், திருப்பதி தேவஸ்தானம் சார்பில் அதிகாலை பெருமாள் சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து, திருக்கோவிலுார் ஜீயர் சுவாமிகளின் சீடரான கோவிந்த சீதாராம ராமானுஜதாசன் ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. பக்தர்களுக்கு தீர்த்தம், பிரசாதம் வழங்கப்பட்டது.முக்கிய நிகழ்வாக, நாளை மறுநாள் மாலை 5:00 மணியளவில், சுமங்கலி பெண்களின் திருவிளக்கு பூஜை, மறுநாள் மாலை சிறப்பு பஜனை நடக்கிறது.