பழநி முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ 2.70 கோடி
பழநி; பழநி முருகன் கோயில் உண்டியல் எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. அதில் ரூ.2.70 கோடி காணிக்கையாக கிடைத்தது.
பழநி முருகன் கோயிலில் நேற்று (பிப்.19) உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. இதில் எண்ணிக்கையில், வெளிநாட்டு கரன்சி 889 எண்ணங்கள், தங்கம் 342 கிராம் வெள்ளி 8.833 கிலோ, கரன்சி ரூ.2 கோடியே 46 லட்சத்து 30 ஆயிரத்து 874, கிடைத்தது. மேலும் ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.15 ஆயிரத்து 78, ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.2 லட்சத்து 56 ஆயிரத்து 500, பழநி அடிவாரம், திருஆவினன்குடி கோயில் உண்டியல் காணிக்கை ரூ.21 லட்சத்து 25 ஆயிரத்து 798 என மொத்தம் ரூ.2 கோடியே 70 லட்சத்து 28 ஆயிரத்து 250 கிடைத்தது. கல்லூரி மாணவ, மாணவியர்கள்,அலுவலர்கள் உண்டியல் எணணும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இணை கமிஷனர் வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். எண்ணிக்கை இன்று தொடர உள்ளது.