பரியானம்பற்ற பகவதி அம்மன் கோவில் திருவிழா கோலாகலம்
பாலக்காடு; பரியானம்பற்ற பகவதி அம்மன் கோவில் பூரம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஸ்ரீகிருஷ்ணபுரம் அருகியுள்ளது பிரசித்தி பெற்ற பரியானம்பற்ற பகவதி அம்மன் கோவில். இங்கு எல்லா ஆண்டும் மாசி மாதம் திருவிழா கொண்டாடுவது வழக்கம். நடப்பாண்டு பூரம் திருவிழா நேற்று காலை நடைதிறப்போடு தொடங்கியது. காலை 7:00 மணிக்கு சோபான சங்கீதம், 8:30க்கு பஞ்சவாத்தியம் முழங்க யானைகள் அணிவகுப்புடன் காழ்ச்ச சீவேலி நடந்தது. மாலை 5:30 மணிக்கு வடக்கு, கிழக்கு மற்றும் மேற்கு பகுதி பக்தர்களின் பொய்க்குதிரை, பொய்க்காளை, தேர் மற்றும் யானைகள் ஆகியவை பாண்டி மேளம் என்ற செண்டை மேளம் முழங்க பகவதி அம்மன் சன்னதியில் வந்து அணிவகுத்த வைபவம் நடந்தது. அதேபோல் விழா கொண்டாடும் உப கோவிகளின் உற்சவமூர்த்திகளும் மேலத்தாளங்கள் முழங்க யானைகள் அணிவகுப்புடன் எழுந்தருளி பரியானம்பற்ற பகவதி அம்மன் கோவில் சன்னிதிக்கு வரும் நிகழ்வும் நடந்தது. இதை காண ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்திருந்தனர்.