உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் தேர் திருவிழா

அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் தேர் திருவிழா

விழுப்புரம்: சாமிப்பேட்டை அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயானக் கொள்ளையையொட்டி தேர் திருவிழா நடந்தது.


விழுப்புரம் அடுத்த சாமிப்பேட்டை கிராமத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மகா சிவாரத்திரி விழா கடந்த 15ம் தேதி சக்தி கரகம் எடுத்தல், காப்பு கட்டுதலோடு துவங்கியது. தொடர்ந்து தினமும் அம்மன் வீதியுலா நடந்தது.


நேற்று முன்தினம் மாலை 4:40 மணிக்கு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளச் செய்து பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.


மாலை 5:00 மணிக்கு மயானக் கொள்ளையும், நேற்று நள்ளிரவு 12:00 மணிக்கு தெப்பல் உற்சவமும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !