உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநியில் குறவர் இனத்தவர் வள்ளிக்கு தேன், திணை மாவுடன் சீர்வரிசை

பழநியில் குறவர் இனத்தவர் வள்ளிக்கு தேன், திணை மாவுடன் சீர்வரிசை

பழநி; பழநி முருகன் கோயிலுக்கு குறவர் இனத்தினர் சீர்வரிசையாக பல்வேறு பொருட்களை ஆட்டம் பாட்டத்துடன் மேளதாளங்கள் முழங்க எடுத்து வழங்க வந்தனர்.

பழநி முருகன் கோயிலில் வன வேங்கைகள் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் எம்.எல்.ஏ., செந்தில்குமார், வன வேங்கைகள் கட்சி தலைவர் இரணியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

அதன்பின் தமிழக முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை புரிந்த குறவர் இன பண்பாட்டு சீர் கொடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. வள்ளிக்கு சீர்வரிசையாக தேன், திணை மாவு, மா, பலா, வாழை, உள்ளிட்ட பொருட்களை பாரம்பரிய முறையில் எடுத்து வந்தனர். அவர்களுடன் காவடி எடுத்து, அலகு குத்தி பக்தர்கள் வந்தனர். மேலும் பழநி பஸ் ஸ்டாண்டில் இருந்து துவங்கிய ஊர்வலம் பாத விநாயகர் கோயிலில் வேலன் ஆட்டம், குறவை ஆட்டம், வள்ளிக்கும்மி, காவடி ஆட்டம், வில் அம்பு படைத்திறல், தொண்டகபறை முழக்கம் உடன் ஊர்வலமாக வந்தனர். பழநி முருகன் கோயில் சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !