உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் சனி பெயர்ச்சி விழா

திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் சனி பெயர்ச்சி விழா

திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் சனி பெயர்ச்சி விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் சனி பெயர்ச்சி விழாவை முன்னிட்டு நேற்று காலை மூல மூர்த்திகளுக்கு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. காலை 8:24 மணி முதல் 8:31 மணிக்குள் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சி அடைவதை முன்னிட்டு, நவகிரக சனி பகவானுக்கு அபிஷேகம், வெள்ளிக்கவசத்தில் அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !