வத்திராயிருப்பு முத்தாலம்மன் கோயிலில் தேரோட்டம் விமரிசை
ADDED :1 days ago
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு முத்தாலம்மன் கோயில் தேரோட்டம் இன்று விமரிசையாக நடந்தது. இதனை முன்னிட்டு இன்று அதிகாலை தேருக்கு முத்தாலம்மன் எழுந்தருளினார். சிறப்பு பூஜைகளுக்கு பின்பு தேர் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி துவங்கியது. நகரின் அனைத்து தெருக்களிலும், பஜார் வீதிகளிலும் தேர் வலம் வந்த நிலையில் அப்பகுதி மக்கள் அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர். மாலை 4:00 மணிக்கு தேர் நிலையம் சேர்ந்தது. சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான மக்கள் அம்மனை தரிசித்தனர். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம், பக்தர்கள் குழுவினர் செய்திருந்தனர்.