சின்னாளபட்டி தேவி கருமாரியம்மன் கோயில் திருவிழா
ADDED :220 days ago
சின்னாளபட்டி: சின்னாளபட்டி தேவி கருமாரியம்மன் கோயில் மாசி திருவிழாவில் நேற்று அசலை (சிறுமலை) தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது. சின்னாளபட்டி தேவி கருமாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் மாசி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் வேண்டுதல்களை நிறைவேற்றுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி நடக்கிறது. நேற்று அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் நடந்தது. சிறுமலையில் உள்ள அசலை(சிறுமலை)க்கு சென்று சிரஞ்சீவி தீர்த்தம் எடுத்து வரப்பட்டது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் தீர்த்தக்குடங்களுடன் ஊர்வலமாக வந்தனர். அம்மனுக்கு ஆராதனை நடந்தது.